பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சியை வரவேற்கிறோம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் கக்கனின் 40ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு சீமான் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மஞ்சள் பை இயக்கம் மீண்டும் தொடங்கியதற்கு வரவேற்புத் தெரிவித்தார்.