சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
ஒமைக்ரான் தொற்று பரவுவதைத் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல் முறைகளான கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது, சமூக இடைவெளிகளைக் கடைப்பிடிப்பது மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்களை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளிகளை கடைபிடிக்காமல் இருப்பதும் வேதனை அளிக்கிறது.
அனைத்து மாவட்டங்களிலும் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.