டெல்லியில் பாதுகாப்பு அதிகாரி சிலரால் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டு பயங்கரமாக கொல்லப்பட்டார். இதனை கண்டிக்கும் விதமாக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வலுத்து வந்தது.
தொடர்ந்து நடவடிக்கை எடுக்காத பாரதிய ஜனதா அரசை கண்டித்தும் சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக தூக்கிலிட வேண்டும் எனவும் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.