தமிழகத்தில் 5 நாட்களுக்கு பிறகு வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டதால், பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூச விழாவையொட்டி, தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு 5 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. 5 நாட்களுக்கு பிறகு வழக்கம் போல் இன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். திருச்செந்தூர் முருகன் கோயில், ராமேஸ்வரம் ராமநாத சாமி கோயிலில் ஏராளமானோர் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.