இந்தியாவில் ஒமைக்ரான்.. பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70 பேருக்கு ஒமைக்ரான்…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33.89 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

புதுச்சேரியில் அனைத்து தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கும் வரும் 31ம் தேதி வரை விடுமுறை

கொரோனாவின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால் புதுச்சேரியில் அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி, இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன. கொரோனா பாதிப்பு இன்று 2 ஆயிரத்தை கடந்துள்ளதால் புதுச்சேரியில் உள்ள…

சானியா மிர்சா டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா 2003-ம் ஆண்டு முதல் இந்தியாவிற்காக விளையாடி வருகிறார். இதுவரை 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இந்நிலையில் சானியா மிர்சா டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். சானியா மிர்சா கூறும்போது, ‘நான்…

புதிய காவல் ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி. செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆணையத்தின் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் அலாவுதீன் மற்றும் ராதாகிருஷ்ணன், டாக்டர் ராமசுப்ரமணியம், பேராசிரியர் நளினிராவ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆணையத்தின்…

எரிபொருள் வாங்குவதற்காக இலங்கை அரசுக்கு இந்தியா ரூ.3,730 கோடி கடனுதவி

எரிபொருள் கொள்முதலுக்கு இந்தியாவின் உதவியை நாட இலங்கை திட்டமிட்டிருந்தது. இலங்கை அரசு இந்தியாவிடம் 7,391 கோடி ரூபாய் கடன் உதவி கோரியிருந்தது. இந்நிலையில், இந்தியா சார்பில் பெற்றோலியப் பொருட்களை வாங்குவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ரூ.3,730 கோடி கடனுதவி அளிக்க முடிவு செய்துள்ளது.…

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் லேசான மழை வாய்ப்பு..!

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும். நாளை முதல்…

சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா பரவலைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் விமான சேவைகள் தடை செய்யப்பட்டன. அதன்பிறகு கொரோனா தாக்கம் சற்று குறைந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு…

முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி அடுத்த மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி பார்ல் நகரில்…

கர்நாடகாவில் பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் 4 பேர் படுகாயம்

கர்நாடகாவில் பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து பாலத்தின் மீது சென்ற லாரி கால்வாயில் விழுந்து விபத்துக்குளானது. பெல்லாரி மாவட்டம் பொம்மனல் கிராமத்தில் உள்ள இந்த கால்வாயை கடக்க கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. பாலம் பழுதடைந்த நிலையில்,…

Translate »
error: Content is protected !!