தமிழ்நாடு தென்னை விவசாய சங்கத்தினர் சாலையில் போராட்டம்

 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில் மத்திய மாநில அரசு தேங்காய்க்கு உரிய விலை வழங்க கோரி தமிழ்நாடு தென்னை விவசாய சங்கத்தினர் சாலையில் தேங்காய் உடைத்து போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தேங்காய் விலை 7 ரூபாய்க்கும் கீழ் குறைந்துள்ள நிலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மற்றும் தேங்காய் கொள்முதல் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால் தென்னை விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக தமிழ்நாடு தென்னை விவசாய சங்கத்தினர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில் சாலையில் தேங்காய்களை எறிந்து தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் தமிழக அரசும் மத்திய அரசும் தேங்காய்க்கு உரிய கொள்முதல் விலையை வழங்க கோரியும் வெளிநாடுகளிலிருந்து தேங்காய் உற்பத்தி செய்யும் மூலப் பொருட்களின் இறக்குமதியை மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்றும்  கோஷமிட்டனர்.

இந்நிலையில்  தென்னை விவசாயிகள் கூறுகையில் தேங்காய் உற்பத்தி செய்வதில் உறம் விலை மற்றும் கூலியாட்களின் சம்பளம் 100 மடங்கு உயர்ந்துள்ள நிலையில் தேங்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் தேங்காய் கிலோ 50 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், கொப்பரை தேங்காய் விலை ஒரு கிலோ 140 ரூபாய்க்கு, விலை நிர்ணயம் செய்து கேரள அரசை போன்று கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேங்காயை தமிழக அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

Translate »
error: Content is protected !!