திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் – என்ஐஏ அறிவிப்பு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் பகுதியை சேர்ந்த பாத்திரக்கடை நடத்தி வந்த ராமலிங்கம் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார்.  குறிப்பாக மதமாற்றத்தை தட்டிக்கேட்டதற்காக ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 12 நபரை கைது செய்தனர். பின்னர் மதமாற்றம் தொடர்பான விவகாரம் என்பதால் இந்த வழக்கானது  என்.ஐ.ஏவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

என்ஐஏ வழக்குப்பதிவு செய்த என்ஐஏ அதிகாரிகள் தலைமறைவாக உள்ள முகமது அலி ஜின்னா, அப்துல் மஜித், புர்ஹானுதீன், சாகுல் ஹமீது, நஃபீல் ஹாசன் ஆகிய 5 பேரை தேடி வந்தனர். என்.ஐ.ஏ. அதிகாரிகளால் தேடப்படும் குற்றவாளிகள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் என்ஐஏ அறிவித்தது.    இந்த நிலையில் இந்த வழக்கில் கடந்த 3 வருடங்களாக 5 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் தேடி கிடைக்காததால், தலைமறைவாக உள்ள இந்த 5 பேர் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு நபர் ஒருவருக்கு  ரூ. 5 லட்சம் வழங்கப்படும் எனவும், தகவல் தெரிவிப்பவர்கள் விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் என்ஐஏ அறிவித்துள்ளது. தகவல் அளிக்க வேண்டிய முகவரி,

தேசிய புலனாய்வு முகமை, எண். 10, மில்லர்ஸ் சாலை, புரசைவாக்கம், சென்னை – 600 010. கைபேசி எண். : +91 9962361122 தொலைபேசி எண். 044 – 26615100. Mail ID : info-che.nia@gov.in

Translate »
error: Content is protected !!