உத்தரபிரதேசம்: ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால், தரையோட பெயர்த்து கொள்ளையர்கள்..!

உத்தரபிரதேச ஆக்ரா மாவட்டத்தில் உள்ள தாஜ்கஞ்ச் என்ற இடத்தில் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலைய எல்லைக்குள் கலால் ஹரியா என்ற இடத்தில் போலீஸ் சோதனைச் சாவடி உள்ளது. இந்த போலீஸ் சோதனை சாவடியில் இருந்து 400 மீட்டர் தொலைவில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. ஏடிஎம் இயந்திரத்தில் 8 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் இருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை 2.45 மணியளவில் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால், இயந்திரத்தை உடைக்க முடியாததால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள், ஏடிஎம் இயந்திரத்தை தரை முழுவதும் பெயர்த்துவிட்டு துக்கிச்சென்றனர்.

இன்று காலை வாடிக்கையாளர் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்தபோது ஏடிஎம் இயந்திரம் உடைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசில் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் பணத்துடன் எ.டி.எம் இயந்திரத்தை துக்கிச்சென்ற கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!