நீட் தேர்வு வினாத்தாளில் பெரும்பாலான கேள்விகள் மாநில அரசின் பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று தமிழகத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில், இயற்பியல், விலங்கியல் பாட வினாக்களில் 95% வினாக்கள் தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகங்களில் இருந்து தான் கேட்கப்பட்டுள்ளது. தாவரவியல், வேதியியல் பாடங்களில் 75% வினாக்கள் மாநில அரசின் பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 76 வினாக்கள் எளிமையாக இருந்ததாகவும், 62 வினாக்கள் சராசரியாக இருந்ததாகவும், 62 வினாக்கள் கடினமாக கேட்கப்பட்டிருந்ததாகவும் பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்சமாக தாவரவியலில் 20 வினாக்கள் கடினமாக கேட்கப்பட்டிருந்ததாகவும், இயற்பியலில் 19 வினாக்கள் கடினமாக இடம்பெற்றதாகவும், நீட் தேர்வை எழுதியவர்கள், இயற்பியல் பாட வினாக்கள் கடினமாக இருந்ததாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.