ஐக்கிய நாடுகள் சபையின் மூன்று பதவிகளுக்கான தேர்தலில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஐ.நா. பெண்கள் நிலை தொடர்பான ஆணைய உறுப்பினர் பதவிக்கு நடந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதன் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும். இதே போல் பொருளாதார சமூக கவுன்சில் மற்றும் நிகழ்ச்சி திட்டமிடல் குழுவான CPC ஆகிய இரண்டு ECOSOC பதவிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 75-வது ஐநா பொதுச்சபை கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற உள்ள நிலையில் இந்தியாவுக்கு ஐ.நா.சபையின் முக்கிய பதவிகளில் கிடைத்த இந்த வெற்றி கூடுதல் வலிமையைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.