10, 12 ஆம் வகுப்பு பொதுதேர்வு வரும் 20ம் வெளியாகும்

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப்பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 10, 11 & 12-ம் வகுப்பில் படித்த மாணவர்களுக்கு கடந்த மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற்றது.

பொதுத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை நடைபெற்றது.

நாளை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், வரும் 23-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு தேர்வு முடிவுகளும் வரும் 20-ம் தேதி வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வரும் 20-ம் தேதி, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட உள்ளதாகவும், அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், நண்பகல் 12 மணிக்கு 10-ம் வகுப்பு முடிவுகளும் வெளியிடப்படும் என்றும் அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் www.tnresults.nic.in , www.dge.tn.gov.in , www.dge1.tn.gov.in , www.dge2.tn.gov.in என்ற இணையதளங்களில் தங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்றும், பதிவு செய்த செல்போன் எண்களுக்கு SMS வாயிலாகவும் முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்றும், பள்ளிகள் வாயிலாகவும் முடிவுகளை அறியலாம் என்றும், அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி முடிவுகளை அறியலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!