தஞ்சாவூர் வண்டிக்காரத்தெரு கோரிகுளம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். கூலித்தொழிலாளி. இவரது மனைவி கெளரி. இவர்களுக்கு நந்தினி, கௌசல்யா, விஷால் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் கெளசல்யா (17). அரசு உதவிப்பெறும் பள்ளி ஒன்றில், ப்ளஸ்-2 படித்து வருகிறார்.
இவர், தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களை, பொருள் மாறாமல் அப்படியே தலைகீழாக வேகமாக எழுதுகிறார். இதனை கண்ணாடியில் பார்க்கும் போது தலைகீழாக எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் அப்படியே பொருள் மாறாமல் மற்றவர்கள் எழுதுவது போல் தெரிகிறது. இதனை அறிந்த பள்ளி நிர்வாகத்தினர், அக்கம் பக்கத்தினர் வெகுவாக பாராட்டி வருகி்ன்றனர்.
இது குறித்து மாணவி கெளசல்யா கூறுகையில், நான் 6ம் வகுப்பு படிக்கும் போது ஆம்புலன்ஸ் வாகனத்தில் எழுத்துகள் தலைகீழாக எழுதி இருக்கும், அதை பார்க்கும் போது ஏன் மற்ற வார்த்தைகளை அப்படி எழுத கூடாது என தோன்றியது. இதனையடுத்து அதற்கான முயற்சியில் இறங்கினேன். இதற்காக வீட்டில் சும்மா இருக்கும் போது, தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்களை ஒவ்வொன்றாக தலைகீழாக எழுதி பார்த்து கண்ணாடி எவ்வாறு தெரிகிறது என்று பார்ப்பேன். அப்படியே தொடர்ந்து எழுத கற்றுக்கொண்டேன்.
தற்போது, ஒரு ஏ4 பக்க அளவிலான கட்டுரையை 15 நிமிடங்களில் எழுதி முடித்து விடும் அளவிற்கு வளர்த்துள்ளேன். எல்லோரும் இடது புறத்தில் இருந்து, வலது புறம் எழுதுவார்கள், அதனை கண்ணாடியில் பார்க்கும் போது தலைகீழாக தெரியும். ஆனால் நான் வலது புறத்தில் இருந்து இடதுபுறம் நோக்கி எழுதுவேன், அதனை கண்ணாடியில் அல்லது, பேப்பரின் பின் பக்கம் ஒளி வீசி பார்க்கும் போது நேராக தெரியும் என மாணவி கூறுகிறார். கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். ஆனால் இதை யாரிடம் சொல்லி, வெளி உலகத்திற்கு எனது திறமையை கொண்டு செல்லவது என தெரியாமல் இருந்து விட்டேன்.
ப்ளஸ் 2 படித்து முடித்து டாக்டராக அல்லது ஐ.பி.எஸ்.,யாக வேண்டும் என்பது எனது கணவாக உள்ளது டிஜிபி சைலேந்திரபாபு தனது ரோல் மாடலாக இருப்பதாக தெரிவித்தார். மாணவியின் தாய் கூறுகையில், எங்களது மகள் கெளசல்யாவின் ஏதே கிறுக்கி கொண்டு இருக்கிறார், நேரத்தை வீணாக்கமல் படி என்று கண்டிப்போம், ஆனால் மற்றவர்கள் அவளை பாராட்டும் போது தான், அவளின் திறமை தெரியவந்தது என கூறுகிறார்.