தவறான வழியில் வாகனம் ஓட்டியதாக 1,595 வழக்கு பதிவு

சென்னையில் நேற்று ஒரே நாளில் சிறப்பு வாகனத் தணிக்கை மூலம், தவறான வழியில் வாகனம் ஓட்டியதாக 1,595 வழக்குகளும், அதி வேகமாக வாகனம் ஓட்டியது தொடர்பாக 403 வழக்குகளும், வேகமாக வாகனம் ஓட்டியது தொடர்பாக 96 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துக்களை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை பெருநகரம் முழுவதும் நேற்று ஒரு நாள் சிறப்பு வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். இந்த தணிக்கையில் தவறான வழியில் வாகனம் ஓட்டியது தொடர்பாக வடக்கு மண்டலத்தில் 674 வழக்குகளும், தெற்கு மண்டலத்தில் 407 வழக்குகளும், கிழக்கு மண்டலத்தில் 514 வழக்குகளும் என மொத்தம் 1,595 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அதிவேகமாக வாகனம் ஓட்டியது தொடர்பாக வடக்கு மண்டலத்தில் 101 வழக்குகளும், தெற்கு மண்டலத்தில் 165 வழக்குகளும், கிழக்கு மண்டலத்தில் 137 வழக்குகளும் என மொத்தம் 403 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல வேகமாக வாகனம் ஓட்டியது தொடர்பாக வடக்கு மண்டலத்தில் 14 வழகுகளும், தெற்கு மண்டலத்தில் 46 வழக்குகளும், கிழக்கு மண்டலத்தில் 36 வழக்குகளும் என மொத்தம் 96 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சிறப்பு வாகனத் தணிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு வழக்குமாறும் சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!