ஒடிசாவைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை, ‘அதிகபட்ச ஓவியங்களை வரைந்த குழந்தை’ என்ற உலக சாதனையை படைத்துள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை அன்வி விஷேஷ் அகர்வால். 9 மாத குழந்தையாக இருந்தபோதே வரையத் தொடங்கி, இதுவரை 72 ஓவியங்கள் வரைந்து ‘அதிகபட்ச ஓவியங்களை வரைந்த குழந்தை’ என்ற உலக சாதனை படைத்துள்ளார். மேலும் லண்டன் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டிலும் இடம்பெற்றுள்ளார்.
மேலும், அன்வி, 1 வயது 9 மாத குழந்தையாக இருந்த போது, அந்நிய மொழியான ஸ்பானிஷ் மொழியின் 42 ஒலிப்பு ஒலிகளை பேசி இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.