தமிழகத்திற்கு பல்வேறு வழிகளில் 5,500 கோடி ரூபாய் மதிப்பில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கூறப்படுகிறது. 2021 லிருந்து சரக்கு பிரிவில் தங்கம் கடத்தல் தொடர்பாக 234 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 160 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.இதன் மதிப்பு 75 கோடி ஆகும்.
கடத்தலுக்கென குருவிகளாக செல்பவர்கள் கைதேர்ந்தவர்கள் ஷூ ,வாட்டர் பாட்டில் ,பேஸ்ட் ,சேவிங் பிரஸ், பேப்பர் வடிவில் சட்டை கலர் ,பாவாடை நாடாவில் வைத்து கடத்தி வருவது அதிகமாகிறது.
தற்போது மாத்திரை வடிவில் ஆறு மணி நேரத்தில் சென்னை வந்து கழிவறையில் வடிகட்டி தங்கத்தை கடத்துவதும் பசை போல உருக்கி, ஆசனவாயிலில் வைத்து வருவது அதிகரித்து வருகிறது.
பெண்கள் உள்ளாடைக்குள் வைத்து தங்கத்தை கடத்தி அதிகரித்து வருகிறது. இந்த கடத்தலுக்கு உதவியாக சுங்கத்துறை ,வருவாய் புலனாய்வுத் துறை ,விமான நிலைய காவல்துறையினர், ஈடுபடுவதால் கடத்தல் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் கடத்தல் தங்கம் வருவதாக கூறப்படுகிறது.