75-வது தேசிய காலாட்படை தினம்.. பிபின் ராவத் மலர் வளையம் வைத்து மரியாதை

75-வது தேசிய காலாட்படை தினத்தை முன்னிட்டு போர் நினைவிடத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய போர் படையான காலாட் படையின் பங்களிப்பைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27-ஆம் தேதி தேசிய காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது. கடந்த 1947 ஆம் ஆண்டு இதே நாளில் பாகிஸ்தான் ஆதரவுடன் பழங்குடியினர் ஜம்மு காஷ்மீரில் நுழைவதைத் தடுத்து, ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இந்திய ராணுவத்தின் காலாட்படை வீரர்கள் கால் பதித்து, ஜம்மு -காஷ்மீர் மாநிலம் காப்பாற்றப்பட்டது. அதன்படி இன்று 75-வது தேசிய காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், தலைமை ராணுவத் தளபதி நராவனே மற்றும் ராணுவ கமாண்டர்கள், உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Translate »
error: Content is protected !!