டி-20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகல்

உலகக்கோப்பை டி20 தொடருக்கு பிறகு 20 ஓவர் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகவுள்ளார்.

இதுகுறித்து டிவிட்டர் பதிவில், ஐந்து வருடங்களுக்கும் மேலாக இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை வகித்து வருவதாகவும், அதனால் கடுமையான பணிச்சுமைக்கு ஆளாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்த முழுமையாக தயாராக வேண்டியுள்ளதைத் தாம் உணர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் உலகக் கோப்பைக்கு பிறகு, டி20 போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் தமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். டி20 தொடருக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து கோலி விலகுவதால் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!