பொதுத்துறை வங்கிகளின் வாரக்கடன் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை

வாராக்கடன் பிரச்னையை தீர்க்க தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் எனப்படும் வாரக் கடன் வங்கி வழங்கும் பத்திர ரசீதுகளுக்கு மத்திய அரசு 30 ஆயிரத்து 600 கோடி ரூபாய் உத்தரவாதம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

இந்தியப் பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் வாராக் கடன் பிரச்சனையைத் தீர்க்கவும், கடனை வசூல் செய்யவும் வாரக் கடன் வங்கியை மத்திய அரசு அமைத்தது. மத்திய கம்பெனிகள் சட்டப்படி உருவாக்கப்பட்ட இந்த வங்கியில் பொதுத்துறை வங்கிகள் 51 சதவீத பங்குகளையும், பொதுத்துறை நிதியியல் முதலீட்டாளர்கள் 49 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வாரக்கடன் வங்கிக்கு அடுத்த 5 வருடங்களுக்கு 30 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Translate »
error: Content is protected !!