முன்னாள் அதிமுக அமைச்சர் கே சி வீரமணி சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பணம் மற்றும் கம்ப்யூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த அதிமுக ஆட்சியின்போது 2016 முதல் 2021 வரை வணிகவரித் துறை அமைச்சராக கே சி வீரமணி இருந்தார் இந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இன்று முன்னாள் அமைச்சர் கே சி வீரமணிக்கு சொந்தமான 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை வேலூர் ஏலகிரி ஜோலார்பேட்டை, ஓசூர் பெங்களூர் சென்னை உள்ளிட்ட 35 இடங்களில் முன்னாள் அமைச்சர் வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டனர்.இதில் சென்னையில் மட்டும் 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் 34 நான்கு லட்ச ரூபாய் பணம் மற்றும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அன்னியச் செலாவணி ஐந்து கம்ப்யூட்டர்கள் ஐந்து ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் ஏராளமான ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவிக்கின்றனர்.