ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரப்படுமா பெட்ரோலிய பொருட்கள்… இன்று ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 45ஆவது கூட்டம்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில், லக்னோவில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 45ஆவது கூட்டம் நடைபெற்று வருகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இதற்கு முந்தைய கூட்டங்கள் அனைத்தும் காணொலி வாயிலாக நடைபெற்று வந்த நிலையில், கிட்டத்தட்ட 20 மாதங்களுக்குப் பிறகு, இன்று நேரடியாக நடைபெற்று வருகிறது. 28 மாநிலங்களின் பிரதிநிதிகள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். தமிழகம் சார்பில், நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் அதேபோல், பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வருவது தொடர்பாகவும் இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெட்ரோலியப் பொருட்கள் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரப்படும் பட்சத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய்க்கும், டீசல் 68 ரூபாய்க்கும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!