சென்னையில் அதிகரிக்கும் கொரோனா: கட்டுப்பாடுகளை கடுமையாக்க திட்டம்

சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சென்னையை பொருத்தவரையில், ஞாயிற்றுக்கிழமைகளில், காசிமேடு மீன் மார்க்கெட், தி.நகர் பகுதிகளில் சமூக இடைவெளியின்றி மக்கள் கூட்டம் அலைமோதுவதால் மூன்றாம் அலை தொற்றுக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக, மாநகராட்சி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது தொடர்பாக வணிகர் சங்க பிரதிநிதிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு சென்னை மாநகராட்சி சார்பில் ஓரிரு தினங்களில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!