2026-ம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் பாமக 60 இடங்கள் வென்றால் ஆட்சியை கைபற்றலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10.5% இட ஒதுக்கீட்டை நாம் மிரட்டி தான் வாங்கினோம்.. நம் மிரட்டலுக்கு பணிந்து தேர்தல் அறிவிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன் சட்டம் கொண்டு வரப்பட்டது.. 10.5% இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றால் கூட்டணி வேண்டாம் என நான் கூறினேன் என்றார். தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள 10.5% இட ஒதுக்கீடு நமக்கு போதுமானது இல்லை என்ற அவர், 15% இட ஒதுக்கீடு பெறவதே நோக்கம், தமிழகத்தில், தமிழ் எங்கும் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் தமிழ் உள்ளது என நிருபிப்பவர்களுக்கு நான் ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன் எனவும் தமிழ் வளர்ச்சி, மது விலக்கிற்காக நாம் கோட்டையை கைபற்ற வேண்டும், கட்சி நிர்வாகிகள் அதற்கான வேலையை தொடங்குகள் எனறார்.