உள்கட்டமைப்பு துறையில் அதிக முதலீடு தேவை: ரிசர்வ வங்கி ஆளுநர்

உள்கட்டமைப்பு துறையில் அதிக முதலீடு தேவை என ரிசர்வ வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் 48 வது தேசிய மேலாண்மை மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதே தங்களது முயற்சி எனவும், நிலையான வளர்ச்சி என்பது நடுத்தர கால முதலீடுகள், நல்ல நிதி அமைப்புகள் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மூலம் நுண்ணிய அடிப்படைகளைக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், சுகாதாரம், கல்வி, டிஜிட்டல் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் அதிக முதலீடுகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Translate »
error: Content is protected !!