கனடாவிற்கு மீண்டும் விமான சேவை தொடக்கம்…

இந்தியாவில் இருந்து கனடாவிற்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவியதால் இந்தியாவுடனான நேரடி விமான சேவையை கனடா ரத்து செய்தது. இந்த தடை கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வந்தது. இதனால் கனடாவிற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்தியர்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

இந்நிலையில், நாளை முதல் இந்தியாவில் இருந்து வரும் நேரடி விமானங்களை அனுமதிக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம், கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கும் மேலாக இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இதனால் கனடாவிற்கு செல்லவிருந்த இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

 

Translate »
error: Content is protected !!