பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கோடி ரூபாய் என வலைதளத்தில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பாரத பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பு விபரங்களை, தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி, பிரதமர் மோடியின் தற்போதைய சொத்து மதிப்பு 3.07 கோடி ரூபாயாக உள்ளது. இதே கடந்த ஆண்டு 2.85 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 22 லட்ச ரூபாய் அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலம் காந்தி நகரிலுள்ள எஸ்பிஐ வங்கியில் அவர் வைத்திருக்கும் வைப்புத் தொகை கடந்தாண்டு ரூ.1.6 கோடியில் இருந்து ரூ.1.86 கோடியாக அதிகரித்ததுள்ளது தான் சொத்து மதிப்பு உயர்ந்ததற்கு காரணம் என கூறப்படுகிறது.
மேலும் பிரதமர் மோடிக்கு 1.48 லட்ச ரூபாய் மதிப்புள்ள நான்கு தங்க மோதிரங்கள் உள்ளன. அசையும் சொத்துக்களின் மதிப்பு 1.97 கோடி ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.