நடிகர் திலகம் என அனைவராலும் போற்றப்பட்ட சிவாஜி கணேசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை போற்றும் விதமாக கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.1928 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி சின்னையா மன்றாயா் – ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்த சிவாஜி கணேசனின் இயற்பெயர் கணேசன். திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்த அவர், கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்தார்.
கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை ‘சிவாஜி’ கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது. செவாலியர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் சிவாஜி கணேசன். எண்ணிலடங்கா பெருமைகளுக்கு சொந்தகாரரான மறைந்த சிவாஜி கனேசனை கவுரவிக்கும் வகையில் அவரது பிறந்த நாளான இன்று கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.