ஓட்டுப்பெட்டிக்குள் வாக்காளர் அட்டை – தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6ம் தேதி மற்றும் 9ஆம் தேதி என 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. தற்போது, வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை ஆகிய 9 மாவட்டங்களுக்கு நடந்த முதல் கட்ட தேர்தலில் 74. 37 சதவீத வாக்குகளும், 2ம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

இந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சந்திரபுரம் பகுதியில் வாக்குப் பெட்டிகளை பிரித்து பார்த்து வாக்குகளை தரம் பிரித்து எண்ணிக் கொண்டிருந்த பொழுது ஒரு சில வாக்காளர்கள், தங்களது வாக்கு சீட்டுக்கு பதிலாக தவறுதலாக வாக்காளர் அடையாள அட்டையை வாக்குப்பெட்டிகள் போட்டிருந்தது தெரியவந்துள்ளது. இது கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!