கடனில் தவிக்கும் பாகிஸ்தான் – எப்படி மீண்டெழும்?

வெளிநாட்டு வங்கிகளில் அதிகம் கடன் வாங்கிய 10 நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் இடம்பெற்றுள்ள நிலையில், கடனை தற்காலிகமாக ரத்து செய்யும் நடைமுறைக்கு அது தகுதி பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக ஏழை மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட கடன் குறிப்பிட்ட காலம் வரை ரத்து செய்யப்பட்டுவருகிறது. இந்த தற்காலிக கடன் ரத்து நடைமுறைக்கு தான் பாகிஸ்தான் தற்போது தகுதி பெற்றுள்ளது. 2022 ஆண்டுக்கான சர்வதேச கடன் புள்ளியியலை உலக வங்கி திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டு வங்கிகளில் இந்த கடன் ரத்து நடைமுறைக்கு தகுதிபெற்ற நாடுகள் வாங்கிய கடன் விகிதங்களில் பெரிய வேறுபாடு இருப்பது தெரியவந்துள்ளது.

Translate »
error: Content is protected !!