மருத்துவ சிகிச்சையில் ஓ.பி.எஸ். – ஒரு வாரம் பத்திய சாப்பாடு: எதற்காக தெரியுமா?

சென்னை சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், முன்னாள் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஒரு வாரம் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்ள அவர் கோவையில் தங்கி உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. ஆயுர்வேத சிகிச்சைகள் என்றால் முன்பெல்லாம் கேரளாவிற்குத்தான் அனைவரும் செல்வார்கள். இப்போது, தமிழகத்திலும் எல்லா பகுதியிலும் இந்த சிகிச்சை முறைகள் வந்துவிட்டது.

இந்நிலையில், கோவையில் உள்ள பிரபல ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு சென்றிருக்கும் ஓ. பன்னீர் செல்வத்திற்கு முதலில் உணவு கட்டுப்பாடு சொல்லப்பட்டுள்ளது. அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் மெனுவில், கஞ்சி, காய்கறி, பழங்கள் மற்றும் உப்பு, காரம் குறைவான பதார்த்தங்கள் என வழங்கப்பட்டுள்ளன.

தவிர, மூலிகை குளியல், ஆயில் மசாஜ், தலைக்கு மசாஜ் என பல்வேறு மசாஜ்களும் அவருக்கு செய்யப்படுகின்றன. கடந்த அக்டோபர் 18ம் தேதி சென்ற அவருக்கு 19ம் தேதி முதல் சிகிச்சை தொடங்கி இருப்பதாகவும், ஒரு வாரத்திற்கு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓ. பன்னீர்செல்வம் இதுவரை கோவையில் இருக்கும் அந்த ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு 7 முறைக்கு மேல் சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

Translate »
error: Content is protected !!