பாஜக மீது கை வைத்தால் வட்டியும் முதலுமாக திருப்பி கொடுக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்டுமணி, கமிஷன் மணி, ஊழல் ஆரம்பித்து விட்டதாக நிறைய கட்டுரைகள் எழுதப்படுகிறது. இன்னமும் தமிழக முதலவர் மௌனம் காண்பிப்பது ஏன்? ஆதிதிராவிட அமைச்சர் கயல்விழி வீட்டில் ஆதிதிராவிடர் விடுதியில் பணி செய்யக்கூடிய உறுப்பினர்களை சிஹிப்ட்டு போட்டு வேலை வாங்கப்படுகிறது. ஆட்சி அமைத்து 5 மாதங்கள் தான்ஆகிறது. அதற்குள் இவ்வளவு பிரச்னைகள் ஆரம்பிக்கிறது. மத்திய அமைச்சர் பிரகலான் ஜோஷி இந்தியாவில் எங்கும் நிலக்கரி தட்டுப்பாடு வராது என கூறியுள்ளார்.
மேலும், பிரதமர் மோடி, ஊழல் செய்தவர்கள் எங்கு இருந்தாலும் தூக்கி கொண்டு வருவோம் என சொல்லியுள்ளார் . அது தமிழக அரசுக்கும், அமைச்சர்களுக்கும் பொருந்தும். அமைச்சர் சேகர் பாபு, பாஜகவை எப்படி கையாள வேண்டும் என்று தெரியும் என கூறியுள்ளதாக அறிகிறேன், தொட்டு பார்க்கட்டும், 17 மாநிலங்களில் ஆட்சி செய்கிறோம். மோடி டெல்லியில் உள்ளார். தொடுவார்கள் என காத்திருக்கிறோம், தொட்டு பார்க்கட்டும். ஒரு ஹார்பர் தொகுதியிலிருந்து சேகர் பாபு அரசியல் செயகிறார். பாஜக, 11 கோடி உறுப்பினர்கள் கொண்டது.என அவர் கடுமையாக விமர்சித்து பேசினார்.