தமிழ் சினிமாவிற்கு தேசிய விருதுகளை குவித்த நடிகர்கள்

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று காலை 11 மணிக்கு 67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தேர்வான நடிகர், நடிகைகளுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு அவரது கலைசேவையை பாராட்டி வழங்கப்பட்டது.

2019ம் ஆண்டின் சிறந்த படம் – மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான மரைக்கர் திரைப்படம். இப்படம் கொரோனா காரணமாக இன்னும் ரிலீஸ் செய்யப்படாமல் இருக்கிறது.

சிறந்த தமிழ் படம் – அசுரன்

சிறந்த நடிகர் – நடிகர் தனுஷ் – அசுரன் ; நடிகர் மனோஜ் பாஜ்பாய் – போன்ஸ்லே

சிறந்த நடிகை – கங்கனா ரனாவத் (பங்கா மற்றும் ஜான்சி )

சிறந்த துணை நடிகர் – நடிகர் விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ் )

சிறந்த குழந்தை நட்சத்திரம் – நாக விஷால் (கே.டி கருப்பு )

சிறந்த இசையமைப்பாளர் – டி.இமான் ( விஸ்வாசம்)

ஜூரி சிறப்பு விருது – ஒத்த செருப்பு

Translate »
error: Content is protected !!