நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் குறித்து தமிழக முதல்வர் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை நடைப்பெறும் ஆலோசனையில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியகருப்பன், தலைமை செயலாளர் இறையன்பு, துறை சார்ந்த செயலாளர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர்.
தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி நான்கு மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய சூழல் உள்ளதால் முதலமைச்சர் தலைமையில் இன்று நடைப்பெறும் ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.