அடுத்த உ.பி. முதல்வர் பிரியங்கா காந்தி?

அடுத்த உத்திரபிரதேசத்தின் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி நிற்கவேண்டும் என சல்மான் குர்ஷித் தெரிவித்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியில் இருந்து அகற்ற சதித்திட்டம் தீட்டி அவதூறு குற்றச்சாட்டுகளை பரப்பிய முன்னாள் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய் அவர்கள் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க கூறுதல் வேண்டி சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் செய்தியாளர்களை சந்தித்தார் , அப்போது பேசிய அவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் இத்தனை நாள் அனுமதிக்கப்பட்டிருந்தார் நேற்று அவர் வீடு திரும்பியுள்ளார். 40% யுபி தேர்தலில் பிரியங்கா காந்தி தலைமையில் அதிக அளவில் பெண்கள் போட்டியிடுவார்கள் என்ற அவர், பஞ்சாப் தேர்தலில் கேப்டன் அம்ரிந்தர் சிங் தனி கட்சி ஆரம்பித்தால் அது பாஜகவின் வெற்றியை தான் பாதிக்கும் என்றார். இந்தியாவில் சட்டம் ஒழுங்கு மோசமான சூழ்நிலையில் உள்ளது அதை யு ஏ பி ஏ வை அமல்படுத்துவதில் ஐயே தெரிகிறது என்றார். அடுத்த யூ பியின் முதல்வர் வேட்பாளர் பிரியங்கா காந்தி நிற்க வேண்டும் என நாங்கள் எண்ணுகிறோம் ஆனால் அது குறித்து அவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

Translate »
error: Content is protected !!