செம்பரம்பாக்கம் ஏரி – நீர் திறப்பு வினாடிக்கு 2,000 கனஅடி ஆக அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரியின் நீர் வரத்து அதிகரித்து உபரி நீரும் வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏரிக்கு வரும் நீரை அப்படியே வெளியேற்ற அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை, காஞ்சி திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் தற்போது வரை தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்கக் கூடிய செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஏரியின் நீர்மட்டம் உயர்வான 24 அடியில் 21.53 அடி நீர் எட்டியுள்ளது.

பின்னர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக மதியம் 3 மணி அளவில் கூடுதலாக 500 கன அடி என மொத்தம் 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தற்போது 2,000 கன அடியாக உள்ளது. ஆகவே தற்போது ஏரிக்கு வரும் நீரை அப்படியே வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்

Translate »
error: Content is protected !!