தத்தளிக்கும் மக்கள் – களத்தில் குதித்த உதயநிதிஸ்டாலின்

சென்னையில் கொட்டி வரும் கனமழை, 2015ம் ஆண்டை மீண்டும் நினைவுப்படுத்திருக்கிறது. அந்த ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சென்னை மக்கள் பட்ட கஷ்டங்களை யாராலும் மறக்க முடியாது. அப்போது 3 நாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் சென்னையில் வெள்ளம் சூழ்ந்தது. ஆனால் இந்தாண்டோ ஒரே நாள் இரவில் கொட்டித்தீர்த்த மழை பெருவெள்ளத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கனமழை தொடரும் என்பதால் சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் எங்கு காணினும் வெள்ள நீரை தென்படுகிறது. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மக்களின் அன்றாட வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். ரெயின் கோர்ட் அணிந்து கொண்டு களத்தில் இறங்கி ஆய்வு செய்தார். இதற்குப் பின் திமுக நாடாளுமன்ற, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் அளித்தல், பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல், மழை நீரை வெளியேற்றுதல் உள்ளிட்ட நிவாரணப் பணிகளில் ஈடுபட உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்பேரில் தனது சொந்த தொகுதியான திருவல்லிக்கேணி-சேப்பாக்கத்தில் களமிறங்கியிருக்கிறார் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின். லாக் நகர் கிளிமரம், ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். வெள்ள நீரில் சிக்கி தவித்த மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கினார். அதேபோல மழைநீரை வடியவைக்கும் பணி முடிவடையும் வரை பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் மக்களிடம் கேட்டுக்கொண்டார். அதன்பின் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றும் பணியை விரைவில் மேற்கொண்டு, மக்களின் அவசர தேவைகளுக்கு உதவிட தயார் நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கும் கழகத்தினருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!