டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிக கனமழை பெய்யக்கூடும். மேலும், சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும். வருகிற 11ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் அதிக கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!