நாளை கனமழையை எதிர்கொள்ள அரசு தயாராகவுள்ளது

தமிழகத்தில் நாளை  மற்றும் நாளை மறுநாள்  பெய்யும் கனமழை எதிர்கொள்ள மாநகராட்சி தயாராக உள்ளதாகவும், மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,  சென்னையில், 317 பகுதிகளில் நேற்று நீர் தேங்கியிருந்த நிலையில் 140 இடங்களில் முழுமையாக தண்ணீர் அகற்றப்பட்டுவிட்டதாகவும் , 177 இடங்களில் மட்டும் தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 10, 11 தேதிகளில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று கூறப்பட்டுள்ளதால், அதனை எதிர்கொள்ள மாநகராட்சி தயாராக உள்ளது என்றும், மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறினார்.

Translate »
error: Content is protected !!