முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் டெல்டா மாவட்டங்களை ஆய்வு செய்வதற்கு இன்று மாலை கடலூருக்கு செல்ல உள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக, பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். மேலும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை வழங்கி வருகிறார். இதனையடுத்து, மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் டெல்டா மாவட்டங்களை ஆய்வு செய்வதற்கு இன்று மாலை கடலூர் செல்ல இருக்கிறார். மேலும், இரண்டு நாட்கள் டெல்டா மாவட்டங்களில் தங்கியிருந்து அங்கு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளார்.