பாலிடெக்னிக் கல்லூரிகள் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு

 

தமிழகம் முழுவதும் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில், காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடைபெற்றது.

தமிழகத்தில் காலியாக உள்ள 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததை அடுத்து, அத்தேர்வினை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் தேர்வினை ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து, காலியாக உள்ள அப்பணியிடங்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு பின்னர் கொரோனா காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த அக்டோபர் 28ம் தேதி கணினி வழியாக தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு,  நிர்வாக பிரச்னை காரணமாக 2வது முறையாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு டிசம்பர் 8ம் தேதி நடைபெறும் என கூறியிருந்ததன்படி இன்று மாநிலம் முழுவதும் இத்தேர்வு நடைபெற்றுள்ளது. இன்று தொடங்கி வருகிற டிசம்பர் 12ம் தேதி வரை இத்தேர்வு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 140 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கென பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகளுடன் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!