மாஜி அதிமுக அமைச்சர்கள் மீது ஆளுங்கட்சிக்கு காழ்ப்புணர்ச்சி

 

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, மாஜி அதிமுக அமைச்சர்கள் மீது ஆளுங்கட்சி சோதனை நடத்துவதாக அதிமுக நிர்வாகிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாஜி அதிமுக அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து நுங்கம்பாக்கத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் தலைமையில் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேட்டியளித்த அவர், அதிமுகவை ஒடுக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி இத்தகைய தகவல்களை தெரிவித்து வருவதாக குறிப்பிட்டார். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை அமைச்சராக ரகுபதி பொறுப்பேற்க என்ன தகுதி உள்ளது என கேள்வி எழுப்பிய அவர், அவதூறு குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கினை சந்திப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!