ராமர் கோவில் கட்டுமானத்திற்கென அப்பாவி தாழ்த்தப்பட்ட மக்களிடம் இருந்து நிலங்கள் பிடுங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இக்கோயிலுக்கென ராம் மந்திர் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நன்கொடையில் மோசடி நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்தநிலையில் உத்தரபிரதேசத்தில் செய்தியாளர் சந்திப்பின் போது, இதுகுறித்து பேசிய பிரியங்க காந்தி, மக்களின் மதநம்பிக்கை கேலிக்கூத்தாக்கப்பட்டிருப்பதாக விமர்சித்தார். ராமர் கோவில் கட்டுமானத்திற்காக வீடு வீடாக பிரச்சாரம் நடத்தி, நன்கொடை வசூலிக்கப்பட்டதாக கூறிய அவர், குறைந்த விலையிலான நிலங்களை அதிக விலைக்கு வாங்கிக்கொண்டதாக அறக்கட்டளை கணக்கு காட்டப்பட்டிருப்பதாகவும் கூறினார். தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்களும் சட்டவிரோதமாக கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்