தேர்தல் ஆணையர்கள் குழு ஆய்வுக்கு பின்னரே தேர்தலை ஒத்திவைப்பது குறித்து முடிவு


தேர்தல் ஆணையர்கள் குழு ஆய்வுக்கு பின்னரே, உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலை தள்ளிவைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது ஒமிக்ரான் வேகமாக பரவுவதால், உத்தரபிரதேச மாநில தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என பிரதமருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்தநிலையில் உத்தரகண்டில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, உத்தரபிரதேச மாநிலத்திற்கு தேர்தல் ஆணையர்கள் குழு அடுத்தவாரம் செல்ல இருப்பதாகவும், தேர்தல் தொடர்பான ஆய்வுக்கு பின்னரே தேர்தலை ஒத்திவைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.

Translate »
error: Content is protected !!