தமிழகத்திழ்நாட்டில் 80 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் இன்று 16வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் அவர் தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 16 வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. Vovt தமிழகத்தில் கொரொனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அதனை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி போடும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரக்கூடிய நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னையில் ஆயிரத்து 600 இடங்களில் நடைபெற்று வரும் 16-வது மெகா தடுப்பூசி முகாமினை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் இன்று ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதை இலக்காக வைக்கப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாட்டில் 80 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது எனவும் கூறினார். தடுப்பூசி போடப்பட்ட பிறகு பொதுமக்களுக்கு ஏதேனும் பின் விளைவுகள் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள அனைத்து தடுப்பூசி மையங்களிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது