அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 17 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் உதவியாளர் மணியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மணியிடம் பணம் கொடுத்து ஏமாந்த நெய்வேலி பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம் மத்திய குற்றப்பிரிவ காவல்துறையில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக தமக்கு ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மணி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தன் மீது பொய் புகார் அளிக்கப்பட்டதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மனுதாரர் மோசடி செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து மணியின் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது.