பஞ்சாப் முதலமைச்சர் சன்னிக்கு எதிராக முறைகேடு விசாரணை நடத்த கோரி ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா, அம்மாநில ஆளுநரை சந்தித்து முறையிட்டுள்ளார்.
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு நடைபெற்ற சட்டவிரோத மணல் கடத்தல் சம்பவம் பெரும் புயலை கிளப்பி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபேந்தர் சிங் வீடு உள்பட பல்வேறு இடங்களில் ரெய்டு நடத்திய அமலாக்கத்துறை, 4 கோடி ரூபாயை கைப்பற்றியது. இது ஆளும் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், சட்டவிரோத மணல் கொள்ளை வழக்கில் உடனடியாக ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்படி பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் ராகவ் சதா மனு அளித்துள்ளார். அதில் கடந்த 4 மாதங்களுக்கு முன் இல்லாத சொத்துகள் தற்போது சன்னியின் உறவினர்களிடம் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.