நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ளதையடுத்து, பிரதான கட்சிகள் இடப்பங்கீடு குறித்து தங்களது கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து வருகிறது.
அந்த வகையில் அதிமுக சார்பில் போட்டியிடும் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மற்றும் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான 3-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. காஞ்சிபுரம், வேலூர், ஓசூர், கும்பகோணம், தஞ்சாவூர், ஈரோடு, நாகர்கோவில் மாநகராட்சி வேட்பாளர்களும், பொன்னேரி, குடியாத்தம், கடலூர் தெற்கு, நீலகிரி, பேரணாம்பட்டு, வடலூர், உதகை, குன்னூர், கூடலூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட நகராட்சிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.