பிரதமர் மோடியின் தோற்றம் கொண்டவர்  சுயேட்சையாக போட்டி

அச்சு அசலாக பிரதமர் மோடியின் தோற்றம் கொண்ட அபினந்தன் பதக் உத்தரபிரதேசத்தில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் லக்னோ தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்த அபினந்தன் பதக்கின் கோரிக்கைகை பாஜக நிராகரித்துள்ளது. இதையடுத்து, லக்னோவில் உள்ள சரோஜினி நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து கூறிய அவர், யோகி ஆதித்யநாத்தை மீண்டும் முதல்வராக்க தேர்தலில் சுயேட்சையாக போட்டுயிட்டு வெற்றி பெறுவேன் எனவும், மோடியும், யோகியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் எனவும் கூறினார்.

 

 

Translate »
error: Content is protected !!