பச்சை, காவி வண்ணங்களிலும் உடை அணியக்கூடாது

பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் மட்டுமின்றி பச்சை, காவி உள்ளிட்ட வேறு வண்ணங்களிலும் உடைகள் அணியக்கூடாது என கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் தலையில் முக்காடு அணிவதற்கு தடை விதிக்கப்பட்டு அருவது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, பள்ளி, கல்லூரிகளில் மதம் சார்ந்த எந்த செயல்களுக்கும் இடம் கிடையாது என்றும் திட்டவட்டமாக கூறினார்.  மாணவ, மாணவிகள் மத்தியில் நாம் இந்தியர் என்ற மனநிலை ஏற்படவேண்டும் என்றும் ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு எழக்கூடாது என்பதற்காகவே சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

எனவே, பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் மட்டும் இன்றி பச்சை, காவி உள்ளிட்ட வேறு வண்ணங்களிலும் உடைகள் அணியக்கூடாது என்றார். நாட்டின் எதிர்கால சந்ததியினர் மத்தியில் மதம், இனம் சார்ந்த வேறுபாடுகளை ஏற்படுத்தக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

 

Translate »
error: Content is protected !!