ஆராய்ச்சி படிப்புகளுக்கு முதுநிலை படிப்பு கட்டாயம் இல்லை

 

 

முதுநிலை படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளதால், ஆராய்ச்சி படிப்புகளுக்கு முதுநிலை படிப்பு கட்டாயம் இல்லை என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்ட உயர்கல்விக்கான புதிய தேசிய கல்வி கொள்கையிலும் இதே நடைமுறை தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக முதுநிலை பட்டப் படிப்புகளை முடித்து இருப்பவர்கள் மட்டுமே ஆராய்ச்சி படிப்புகளில் சேர முடியும் ஆனால் தற்போது புதிய நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் நடைமுறைப்படுத்த உள்ளது.

அந்த அடிப்படையில் இனி நான்கு ஆண்டுகள் பொறியியல் பட்டப்படிப்புகள் முடித்தவர்கள் ஆராய்ச்சி படிப்புகளில் சேரலாம் தெரிவிக்கப்பட்டடுள்ளது. குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகம் கீழ் செயல்படும் கல்லூரிகளில் 10,000 எம்.இ, எம்.டெக் பட்டப்படிப்புகளுக்கு வெறும் 3000 பேர் விண்ணப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவிக்கின்றது. இதனால் ஆராய்ச்சி படிப்புகளிலும் மாணவர்கள் சேர்க்கை பாதிக்கப்படுகிறது.

இந்த நிலையிலயே அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தி உள்ள நடைமுறை புதிய தேசிய கல்வி கொள்கையிலும் இருப்பதால் அண்ணா பல்கலைக்கழகம் புதிய கல்வி கொள்கையை பின்பற்றுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

 

Translate »
error: Content is protected !!