காங்கிரஸ் ஆட்சியில் மத்திய சட்டத்துறை அமைச்சராக இருந்த அஷ்வினி குமார், அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு இடையே, காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, மூத்த தலைவர்கள் பலரும் வெளியேறி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது மத்திய அமைச்சராக இருந்த அஷ்வினி குமார், கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் தீவிர பரிசீலனைக்கு பின்னரே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், கட்சிக்கு வெளியில் இருந்தும் நாட்டு பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதால், 46 ஆண்டுகளாக இருந்த கட்சியை விட்டு விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.